பிச்சைப் பாத்திரத்துடன் வர வேண்டாம் ராகுல்! மு.க. ஸ்டாலின் பதிவுக்கு பாஜக கருத்து

Wait 5 sec.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சந்திப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை என பாஜக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் விமர்சித்துள்ளார்.தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதற்காக மு.க. ஸ்டாலினை இன்று (நவ. 29) சந்திக்கவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.இருப்பினும், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக மு.க. ஸ்டாலின் சமூக ஊடகத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.இந்த நிலையில், மு.க. ஸ்டாலினின் கருத்தைக் குறிப்பிட்ட பாஜக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து ராம் மாதவ்வின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கடந்த காலங்களில் திமுகவை எட்டப்பர்கள் என ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், இப்போது திமுகவின் முதுகில் குத்தியதற்காக ராகுலை எட்டப்பன் என மு.க. ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.மேலும், பிச்சைப் பாத்திரத்துடன் சகோதரர் (ராகுல்) சென்னைக்கு வர வேண்டாம் என மு.க. ஸ்டாலின் கூறுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.நாங்கள் எட்டப்பர்கள் அல்லர், கட்டபொம்மன்கள்: மு.க. ஸ்டாலின்M.K. Stalin tells Rahul Gandhi not to come to Chennai with a begging bowl: BJP criticizes the Congress