எம்.ஆர். விஜயபாஸ்கரால் அதிமுகவைவிட்டு வெளியே போனவர்தான் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி

Wait 5 sec.

எம்.ஆர். விஜயபாஸ்கரால் அதிமுகவைவிட்டு வெளியே போனவர்தான் செந்தில்பாலாஜி என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அவர் பேசுகையில், "சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய்விடும் என கிராமத்தில் சொல்வார்கள். எம்.ஆர். விஜயபாஸ்கர் போன பிறகு அதிமுக அழிந்துவிடும் என நினைத்தார்கள். அவர் போன பிறகுதான் இவ்வளவு பேர் இங்கு கூடியிருக்கிறார்கள். உண்மையான தொண்டர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், கரூர் என்றால் ஒரு மாதிரி இருக்கிறது. இதற்கு முன்பிருந்த செந்தில்பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கரால் வெளியே போனார். செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அரசு சார்ந்து வைத்த கோரிக்கைக்கு விஜயபாஸ்கர் ஒத்துக்கொண்டிருந்தால் அவர் சென்றிருக்க மாட்டார். பிறகு செந்தில்பாலாஜி சேராத இடத்தில் சேர்ந்துவிட்டார். செந்தில்பாலாஜி போன இடத்திற்கு இன்னும் விசுவாசமாக இருக்கிறார். 450 நாள்கள் சிறையில் இருந்தும் அந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார். இப்படிப்பட்டவர்களையெல்லாம் உருவாக்கியது வெட்கக்கேடானது என்பதை உணர்ந்துள்ளேன். விஜயபாஸ்கர் கட்சியை வளர்க்கவில்லை, தன்னை வளர்த்துக்கொண்டார். தற்போது அவர் அதிகாரத்துக்காக தவெகவில் சேர்ந்திருக்கிறார். தவெகவில் சேர்ந்த விஜயபாஸ்கரை ஒருவராவது மதிக்கிறார்களா? இங்கு 100-இல் இருந்தவர், அங்கு ஜீரோவில் இருக்கிறார், இன்னும் ஒன்றுக்கே வரவில்லை. 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. கட்சியில் இருந்து, இப்படிப்பட்டவர்கள் எல்லாம் போனது நல்லது. களையாக இருந்த விஜயபாஸ்கரைப் பிடுங்கி எறிந்துவிட்டோம். இனி அதிமுக என்ற கட்சி செழித்து வளரும். இங்கு இடைத்தேர்தல் வரும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேர்தல் தள்ளிப் போய்விட்டது" என்று தெரிவித்தார்.AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that Senthil Balaji left the party only because of M.R. Vijayabhaskar.தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!