மணிப்பூர்: 19 ஏக்கரில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட கசகசா பயிர்கள் அழிப்பு!

Wait 5 sec.

மணிப்பூரில் 19 ஏக்கரில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட கசகசா பயிர்களை பாதுகாப்புப் படையினர் அழித்தனர். மணிப்பூர் மாநிலம், சேனாபதி மற்றும் தமெங்லாங் மாவட்டங்களில் மொத்தம் 19 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கசகசா தோட்டங்களைப் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.சேனாபதி மாவட்டத்தில் உள்ள பைபுங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகரி கிராம மலைத்தொடர் பகுதியில், காவல்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டுக்குழுவினர் வெள்ளிக்கிழமை கசகசா தோட்டங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.நகரி அடிவாரத்தில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கசகசா பயிர்களை இக்குழுவினர் அழித்தனர். மேலும், சட்டப்பூர்வ பரிசோதனைக்காக 10 கசகசா காய்கள் மற்றும் பூக்களின் மாதிரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக வியாழக்கிழமை, தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள தமேய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குய்லாங் மற்றும் காடி-4 ஆகிய பகுதிகளில் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், அசாம் ரைபிள்ஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கசகசா தோட்டங்கள் அழிக்கப்பட்டன. Security forces destroyed illegal poppy plantations on a total of 19 acres of land in Manipur's Senapati and Tamenglong districts, a police statement said on Sunday.ராகுல் காந்தியும் சென்னை வருகிறார்: அமைச்சர் விஸ்வநாதன்!