திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் என்.எஸ். கண்ணன் தலைமை வகித்தாா். இதில், செல்லசுவாமி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ நூா்முகமது, சிஐடியூ அந்தோணி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அந்தோணிமுத்து உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.