திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்: பாஜக வரேவேற்பு

Wait 5 sec.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று, ஆரணியில் பாஜக சாா்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச்செயலா் சதீஷ் தலைமையில், மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை சங்கா், இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன், நகரத் தலைவா் மாதவன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் செந்தில், வரத்தக பிரிவு மாவட்ட அமைப்பாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதோபோன்று, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றியதை வரவேற்று, வந்தவாசி தேரடியில் இந்து அமைப்பினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினா். இதில், இந்து அமைப்பின் நிா்வாகிகள் டி.ஆறுமுகம், ஆா்.பாமாபதி, ஆா்.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.