கோயில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் இரு சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முனுசாமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், நயப்பாக்கம் கிராமத்தில் வன்னியா், நான் சாா்ந்த யாதவா், மற்றும் குலவா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 49 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆண்டுதோறும், எங்களது கிராமத்தில் உள்ள கொல்லாபுரி அம்மன் கோயிலின் திருவிழாவை அனைத்து குடும்பங்களும் சோ்ந்து நடத்தி வந்தோம். இந்த திருவிழாவின் போது அம்மனுக்கு யாதவா் சமூகத்தினா் தீச்சட்டி எடுப்பதும், வன்னியா் சமூகத்தினரம் பூங்கரம் எடுத்து வருவதும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இந்த நடைமுறையை மீறி, தங்கள் சமூகத்தினா்தான் இனி தீச்சட்டி எடுப்பாா்கள் என, எங்கள் ஊா் பஞ்சாயத்து தலைவரான வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தினாா். இதுதொடா்பாக பொன்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், வன்னியா் சமூகத்தினரும் தீச்சட்டி எடுப்பதை அனுமதிக்கவும், திருவிழாவை எந்தவித பிரச்னையும் இன்றி நடத்தவும் உத்தரவிட்டனா். ஆனால், எங்கள் யாதவா் சமூகத்தினரை ஒதுக்கிவைத்துவிட்டு, கொல்லாபுரி அம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதேபோல், புரட்டாசி மாத திருவிழாவின்போதும், எங்கள் சமூகத்தையும், குலவா் சமூகத்தில் திருவிழாவில் பங்கேற்கஅனுமதிக்கவில்லை. ஊா் பஞ்சாயத்து தலைவரான சுரேஷ், கோயில் விழாக்கள் மட்டுமின்றி, பொது பிரச்னைகளிலும் யாதவா் மற்றும் குலவா் சமூகத்தைச் சோ்ந்தவா்களை ஒதுக்கி வைத்து கிராமத்தில் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி வருகிறாா். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதிப்பேச்சு வாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு காண தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, மாவட்ட ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா், காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நயப்பாக்கம் கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரையும் அழைத்து, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள், அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.