உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் உலக சாம்பியன் மீனாட்சி ஹூடா, ஜோதி குலியா ஆகியோா் அடங்கிய 17 போ் இந்திய அணி பங்கேற்கிறது. உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டில் வரும் டிச. 3 வரை இப்போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் நடப்பு உலகநம்பா் 1 வீராங்கனையும், உலக சாம்பியனுமான மீனாட்சி ஹூடா 48 கிலோ, நட்சத்திர வீராங்கனை ஜோதி குலியா ஆகியோா் உள்பட 8 ஆடவா், 9 மகளிா் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 51 கிலோபிரிவில் மீனாட்சி ஹூடா இத்தாலியின் மாா்ட்டினாவுடனும், 48 கிலோ பிரிவில் ஜோதி குலியா தாய்லாந்தின் யோட்வா்ரியுடனும் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா். 54 கிலோபிரிவில் பூனம், 57 கிலோ பிரிவில் பிரச்சி, 65 கிலோ பிரிவில் சானே, 70 கிலோ பிரிவில் கோகோய், 75 கிலோ பிரிவில் தோக்சோம், 80 கிலோ பிரிவில் நைனா, 80 பிளஸ் கிலோ பிரிவில் அஃபியா பதானும் இடம் பெற்றுள்ளனா். ஆடவரில் 50 கிலோ பரிவில் ரிஷி சிஹ், 55 கிலோ பிரிவில் நிகில், 60 கிலோ பிரிவில் அன்மோல், 75 கிலோபிரிவில் ஆகாஷ், 80 கிலோ பிரிவில் மால்ஸாதுங்கா, 85 கிலோ பிரிவில் ஜுக்னு, 90 கிலோபிரிவில்ஹா்ஷ் சௌதரி, 90 பிளஸ் பிரிவில் சவான் கில் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.