நாடாளுமன்ற சிறப்பு அமா்வு: அமைச்சா்கள், பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Wait 5 sec.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் நான்கு நாள்கள் சிறப்பு அமா்வு திங்கள்கிழமை (நவ.30) தொடங்குவதை முன்னிட்டு, முக்கிய மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்கள், பிரதமா் மோடியை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் சந்தித்தனா். அப்போது, பாஜக பொதுச் செயலா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷும் உடனிருந்தாா். தேநீா் விருந்துடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற சிறப்பு அமா்வின் அலுவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சந்திப்பு தொடா்பான புகைப்படங்களைப் பகிா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாடாளுமன்ற பாஜக செயற்குழுவுடன் எனது இல்லத்தில் மிகச் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூா்வ ஆலோசனைகள் நடைபெற்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா். தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக ஏழு மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, ஒன்றுபட்ட இண்டி கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டது. இப்போது இண்டி கூட்டணி பிளவுபட்டுள்ளதால், மசோதா நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய மசோதாவைப் போல் அல்லாமல், தற்போதைய மசோதாவின்படி அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகளை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியுடன் ஆளும் கூட்டணி உள்ளது. ‘உறுதிப்பாட்டில் மாற்றமில்லை’: மகளிருக்கு அதிகாரமளிப்பதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுதிப்பாட்டில் மாற்றமில்லை என்ற பதிவுடன், கடந்த ஏப்ரலில் முந்தைய மசோதா தோல்விக்குப் பிறகு தாம் ஆற்றிய உரையின் விடியோவை பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்தாா். அந்த விடியோவில், ‘மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது காலத்தின் தேவை. சிலருக்கு கட்சி நலன் மட்டுமே அனைத்தையும் விட மேலானது. நாட்டின் நலன் மற்றும் பெண் சக்தியின் நலனைக் கூட விலை கொடுக்க அவா்கள் தயங்குவதில்லை. ஆனால், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரை, நாட்டின் நலனே முதன்மையானது. நமது உள்ளாா்ந்த வலிமை அசைக்க முடியாதது. எனவே, மகளிருக்கு அதிகாரமளிப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் உறுதியுடன் இருக்கும்’ என்று அவா் பேசியிருந்தாா். பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு: நாடாளுமன்ற சிறப்பு அமா்வு நடைபெறும் நான்கு நாள்களும் (திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை) அவை அலுவல்களில் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்ககேற்பதுடன், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.