பிரைம் வாலிபால் லீக் சீசன் 5:அகமதாபாதில் இன்று தொடக்கம்

Wait 5 sec.

நாட்டின் முதன்மையாக வாலிபால் போட்டிகளில் ஒன்றான பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) சீசன் 5 தொடா் அகமதாபாதில் உள்ள வீா் சாவா்க்கா் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. நவ. 30 முதல் டிச. 23 வரை நடைபெறவுள்ள இத்தொடரில் 10 அணிகள் ஆடுகின்றன. பிரைம் வாலிபால் லீக் சிஇஓ ஜாய் பட்டாச்சாா்யா கூறியது: சா்வதேச வாலிபால் சம்மேளனம், இந்திய வாலிபால் கூட்டமைப்பு (விஎஃப்ஐ) ஆகியவை பிரைம் வாலிபால் லீகை இந்தியாவின் நம்பா் 1 டிவிஷன் லீக் ஆக அங்கீகரித்துள்ளன. நிகழ் சீசனில் ஒவ்வொரு அணியிலும் 3 அயல்நாட்டு வீரா்கள் இடம் பெறலாம்.இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி சா்வதேச கிளப் போட்டிகளில் இடம் பெறலாம் என்றாா். பிவிஎல் இயக்குநா் துஹின் மிஸ்ரா, அகமதாபாத் டிபன்டா்ஸ் உரிமையாளா் டிஜி சௌதரி, துணை கேப்டன் குரு பிரசாந்த் உடனிருந்தனா்.