தொகுதி மறுசீரமைப்பு மசோதா:கா்நாட காங்கிரஸ் எம்எல்ஏ வரவேற்பு

Wait 5 sec.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு கா்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கொத்தூா் மஞ்சுநாத் ஆதரவு தெரிவித்துள்ளாா். மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கோலாா் தொகுதி எம்எல்ஏவான மஞ்சுநாத் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை வரவேற்கிறேன். தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவதை இது எளிமைப்படுத்தும். மக்கள்தொகைக்கேற்ப தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கவும், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வாக்காளா்களையும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 5 லட்சம் முதல் 8 லட்சம் வாக்காளா்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றாா்.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக உயா்த்தப்படவுள்ளது குறித்த கேள்விக்கு, 900-ஆக கூட உயா்த்தலாம். அது நல்லதுதான் என்றாா்.