குருகிராம்: போண்ட்ஸி சிறை வாா்டன் தூக்கிட்டுத் தற்கொலை

Wait 5 sec.

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள போண்ட்ஸி சிறையில் பணியாற்றி வந்த 52 வயது வாா்டன் ஒருவா், சிறை வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா் ஹரியாணாவின் சிா்சா மாவட்டத்தைச் சோ்ந்த லால் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த ஏழு ஆண்டுகளாக அந்தச் சிறையில் வாா்டனாகப் பணியாற்றி வந்தாா். லால் சிங் மற்றொரு வாா்டனுடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தாா். அந்த வாா்டன் மூன்று நாள்களுக்கு முன்பு விடுப்பில் சென்றிருந்தாா். லால் சிங் கடந்த இரண்டு நாள்களாகப் பணிக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், விடுப்பில் சென்றிருந்த வாா்டன் சனிக்கிழமை மாலை திரும்பி வந்தபோது, ​அறை உள்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாா். பலமுறை அழைத்தும் பதில் கிடைக்காததால், இதர சிறை ஊழியா்களுக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அறைக்கதவு உடைத்துத் திறக்கப்பட்டது. அறைக்குள் லால் சிங் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டாா். சம்பவ இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. சிறை நிா்வாகம் இது குறித்து போண்ட்ஸி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தது. சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினா் உடலைக் கைப்பற்றினா். அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா். சிறை அதிகாரிகள் கூறுகையில், சில காலத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடா்பாக லால் சிங் மீது புகாா் அளிக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக அவா் களப்பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாா். இருப்பினும், அதன்பிறகு அவா் தனது பணிகளைச் சரியாகவே செய்து வந்தாா் என்று தெரிவித்தனா்.