மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து திமுக வாக்களிக்க வேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து திமுக வாக்களிக்க வேண்டியது அவசியம். ஜோசப் குரியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசு பின்பற்றவில்லை. மாநில சுயாட்சிக்காக போராடிய கட்சி திமுக. அரசமைப்பு பாதுகாப்பு, சிறுபான்மையினா் நலன் ஆகியவற்றில் துணை நிற்க வேண்டியது திமுகவின் கடமையாகும். இன்றைய சூழலில் தமிழகத்தைத் தாண்டி இந்திய அளவில் சிந்திக்க வேண்டிய இடத்தில் திமுக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பழிவாங்கும் நேரம் இதுவல்ல. அதைவிடுத்து அரசமைப்பு மற்றும் மக்கள் நலனுக்காக திமுக சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே மதம், ஒரே கலாசாரம் போன்றவற்றை செயல்படுத்த பாஜக தொகுதி மறுவரையறையை முதலில் முன்னெடுக்கிறது. ஏற்கெனவே உள்ள மக்களவை உறுப்பினா்களே கூட்டத்தொடரில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க நேரமில்லாத நிலை உள்ளது. ஆகவே, ஜனநாயகத்தைக் காப்பாற்ற திமுக தோள் கொடுக்க வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது, மாநில செயலா் கே.எஸ். ரசூல்மைதீன், மாவட்டச் செயலா் மைதீன், பொருளாளா் முஹம்மது யாசிா், காஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.