ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.2026 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி (Women's Asian Champions Trophy) தொடர், மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நவம்பர் 19 முதல் 28, 2026 வரை நடைபெற்றது.இத்தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து என 6 ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதியில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா கோப்பையை வென்றுள்ளது. அதேநேரம், இது இந்தியாவின் 4-வது ஆசிய சாம்பியன் கோப்பையாகும்.இதன்மூலம், ஆசிய சாம்பியன் கோப்பைத் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.இத்தொடரில், இந்திய ஹாக்கி வீராங்கனை தீபிகா சிறப்பாக விளையாடி மொத்தமாக 12 கோல்கள் அடித்துச் சாதனைப் படைத்தார்.ஆசிய சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த ஈஸ்ட் பெங்காலுக்கு மோகன் பகான் சாபம் நீங்குமா?Asian Champions Trophy Hockey: Indian women's team are champions for the third time in a row