தூணில் தீபம் ஏற்றும் பணிகள் தீவிரம்!திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, மலை மீதுள்ள தூணைச் சுற்றிலும் கம்புகள் கட்டப்படுகின்றன. சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வரவேற்பு!திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்ற பாதுகாப்பு அளிக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மேளதாளங்களுடன் மலர் தூவி வரவேற்பு அளித்த கிராம பொதுமக்கள். திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பக்தர்கள்!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் கார்த்திகை தீபம் இன்று(சனிக்கிழமை) மாலை ஏற்றப்பட உள்ள நிலையில் காலையிலிருந்து பக்தர்கள் மலை மேல் செல்ல தொடங்கியுள்ளனர் அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்.உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் மதுரை வந்தடைந்தனர்! திருப்பரங்குன்றம் கோயிலின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் இன்று காலை மதுரை வந்தடைந்தனர். உச்சநீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நேற்றைய வழக்கின் விசாரணையில் கடும் கண்டனம் தெரிவித்தது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (நவ. 28, சனிக்கிழமை) தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அறங்காவலா் குழு செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் குழுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலை, தீபத் தூண், தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சிஆா்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உத்தரவிட்டது.