திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!

Wait 5 sec.

​திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவத்தைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் சனிக்கிழமை காலை முதலே திருப்பரங்குன்றத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.​திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுவது வழக்கம். முன்னதாக, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், கடந்த 24-ஆம் தேதி கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.​இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மலையை மத்திய ரிசர்வ் காவல் படையினரின் (சிஆர்பிஎஃப்) கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. மேலும், பக்தர்கள் தீபமேற்றி வழிபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.​இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை காலை முதலே திருப்பரங்குன்றத்தில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் மலை மீது ஏறிச் சென்று கொண்டிருக்கின்றனர்.​இந்நிலையில், மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், "மத்திய ரிசர்வ் காவல் படையினர் வந்த பிறகே, அவர்களது உத்தரவின் அடிப்படையில் தீபத்தூண் அருகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை பொதுமக்கள் மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம்" என அறிவுறுத்தி வருகின்றனர்.Thiruparankundram deepam: Devotees of Lord Murugan arrive from various regionsதிருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம்! செய்திகள் - நேரலை