திருப்பரங்குன்றம் மகா தீபம்: சிறப்பு பூஜைக்குப் பின் மலைக்குக் கொண்டு செல்லப்பட்ட மண்சட்டிகள்

Wait 5 sec.

​மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்காக, தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மண்சட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.​திருப்பரங்குன்றம் மலை உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.​இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்காகத் தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மண்சட்டிகள் தயார் செய்யப்பட்டன. முன்னதாக, கோயில் அலுவலகத்தில் இந்த மண்சட்டிகள் மற்றும் தீபம் ஏற்றத் தேவையான கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.​தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்ட மண்சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை மேல் கொண்டு செல்லப்பட்டன.​மலை மேல் உள்ள தீபத்தூணில் பாதுகாப்பாகத் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பச்சைக் களிமண் பூசப்பட்டு, அதன் மீது இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகா தீபம் ஏற்றும் வைபவத்தைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் சனிக்கிழமை காலை முதலே திருப்பரங்குன்றத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.'Maha Deepam'on a stone pillar atop the Thiruparankundram hill: Earthen pots carried up the hill following special ritualsதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!