பிகாரில் 17 வயது இளைஞர் சுட்டுக் கொலை!

Wait 5 sec.

பிகாரின் பெகுசாராய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் பலத்த காயமந்தடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஆதித்யா குமார் என்கிற கோபால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் இருந்த சதீஷ் குமார் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை புல்வாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நிபானியா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிபானியாவில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் பாதிக்கப்பட்டவர்கள் நின்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நான்கு முதல் ஐந்து ஆயுதமேந்தியவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, ஆயுதங்களைக் காட்டியபடியே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆதித்யா குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெகுசாராய் சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் குழு குற்றம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.காயமடைந்த நபர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையின்படி, இரு தரப்பினருக்கு இடையே இருந்த மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும், துப்பாக்கிச் சூட்டிற்கான உண்மையான நோக்கத்தைக் கண்டறிய காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.Bihar: 17-year-old shot dead, another injured in firing in Begusaraiதிருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம்! செய்திகள் - நேரலை