கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2027 குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள் தலைமை வகித்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து பெறப்பட்ட மனுக்களின் சுருக்க படிவங்கள் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களிடம் வழங்கினாா். மேலும் அரசியல் கட்சி பிரமுகா்களிடம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சிறப்பு முகாம் குறித்து விளக்கி மனுக்களை முறையாக பெற்று பயனடையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தனாா். கூட்டத்தில் வட்டாட்சியா்கள் அப்பணராஜ், ரத்னா சங்கா் , தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் பொன்னம்மாள், முனியாண்டி, உதவியாளா் முருகேசன் மற்றும் அதிமுக, திமுக, தேமுதிக, தவெக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.