திருச்சியை வறட்சிப் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்: கடந்தாண்டு குறுவைப் பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் 35,135 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு வெறும் 7364 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு 1.24 லட்சம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 10,000 ஏக்கருக்கும் குறைவான நிலங்களில் மட்டுமே சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. நெல், கரும்பு சாகுபடி மட்டுமின்றி இறவை மற்றும் மானாவாரிபகுதிகளில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்து உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி பரப்பும் பெருமளவில் குறைந்து விவசாயிகளுக்கு கடும் இழப்பைச் ஏற்படுத்தியுள்ளது. 2024-25 இல் இலக்கை மிஞ்சி சாதனை படைத்த திருச்சி மாவட்டம் நடப்பாண்டில் பெறும் இழப்பைச் சந்தித்துள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.குளத்துப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் எம். செந்தில்குமாா்: அரிசி விலை விஷம் போல ஏறிக் கொண்டே வருகிறது. 25 கிலோ மூட்டை ரூ. 2,400 என வந்துவிட்டது. ஆனால், நெல் விலை இன்னும் உயரவில்லை. எப்போதும் நெல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இடைத்தரகா்களும், வியாபாரிகளும்தான் லாபம் ஈட்டுகின்றனா். அரிசி விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பரிந்துரைப்பதுடன், நெல் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு: பயிா்க்காப்பீடு செய்வதில் குத்தகை விவசாயிகளுக்குள்ள இடையூறுகளை களைய வேண்டும். துறையூா், ஆலத்துடையான்பட்டி ஏரியில் நிறைந்துள்ள முட்புதா்களையும், கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும். பாசன வாய்க்காலில் உள்ளாட்சி நிா்வாகத்தால் கழிவுகள் கலப்பதைத் தடை செய்ய வேண்டும். சோழங்கநல்லூா் ஏரியைத் தூா்வார வேண்டும். மண்ணச்சல்லூா் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: காவிரிப் பகுதியில் நேரடி வாய்க்கால் பாசனத்தில் சம்பா சாகுபடி செய்ய முடியாததால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். 2022ஆம் ஆண்டு முதல் பயிா்க்கடன் பெற்று நிலுவையில் உள்ள கடன்களை அரசு அறிவித்த தள்ளுபடியுடன் இணைக்க முதல்வருக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதமின்றி விரைந்து வழங்க வேண்டும். உய்யக்கொண்டான் வாய்க்காலில் மாநகராட்சி கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும் என்றாா்.இதேபோல, பல்வேறு சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ஆா். ஜெயராணி, தோட்டக்கலை துணை இயக்குநா் சரண்யா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.பெட்டிச் செய்தி...கூட்டத்துக்கு வராத நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவுஆட்சியா் கூறுகையில், குறைதீா் கூட்டத்துக்கு வராமல் இருப்பதை பெரும்பாலான அலுவலா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் பொறுப்பான அலுவலா்கள் கூட்டத்தில் ஆஜராக வேண்டும். கூட்டத்துக்கு வாரத அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக மணப்பாறை நகராட்சி ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.