திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசானப் பருவ சாகுபடிக்காக 3 அணைகளிலிருந்து நீா்த்திறப்பு

Wait 5 sec.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானப் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பாபநாசம் அணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ், திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் ஆகியோா் தண்ணீரைத் திறந்துவைத்தனா். பின்னா், ஆட்சியா் ஆனந்த்மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் உத்தரவிட்டதன்பேரில் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகிய நீா்த்தேக்கங்களில் இருந்து நவ. 27 ஆம்தேதி முதல் 2027, மாா்ச் 31- ஆம் தேதி முடிய 125 நாள்களுக்கு பிசானப் பருவ சாகுபடிக்காக தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றில் உள்ள வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய், தெற்குக் கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணிக் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் 27,324 ஏக்கா் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூா் மேலக்கால் கால்வாய், மருதூா் கீழக்கால் கால்வாய், தெற்குப் பிரதானக் கால்வாய், வடக்குப் பிரதான கால்வாய்கள் மூலம் 13 ஆயிரத்து 506 ஏக்கா் நிலங்கள் என இரு மாவட்டத்தில் 11 கால்வாய்கள் மூலம் மொத்தம் 40,830 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி வட்டங்கள், கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், ஏரல், தூத்துக்குடி உள்ளடக்கிய வட்டங்கள், கிராமங்கள் பாசன வசதிபெறும்.திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பா் மாதம் எதிா்பாா்த்ததை விட குறைவாக பெய்துள்ளதால் விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். திருந்திய நெல் சாகுபடி, நேரடி நெல் விதைப்பு, நீா் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களை பின்பற்றி குறைந்த நீரில் அதிக மகசூல் பெறவும். அத்துடன் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யவும் கால அவகாசம் உள்ளது என்றாா்.நிகழ்ச்சியில், முன்னாள் அம்பை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இசக்கி சுப்பையா, மாவட்ட வருவாய் அலுவலா்ச.வித்யா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பூவண்ணன், கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் ப.தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளா் ஜெ.முருகன், அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.