ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 29) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.சாம் கரண் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 182 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால் மற்றும் நியூரின் டொனால்டு தலா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹாரி ப்ரூக் 9 ரன்கள் மற்றும் டாம் பாண்டன் 3 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனையடுத்து, ஜோர்டான் காக்ஸ் மற்றும் ஜேம்ஸ் கோல்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சற்று தாக்குப் பிடித்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது. இருப்பினும், ஜோர்டான் காக்ஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேம்ஸ் கோல்ஸ் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், பின்வரிசையில் சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.அதிரடியாக விளையாடிய சாம் கரண் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 28 பந்துகளில் 50* ரன்கள் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார். ஜேமி ஓவர்டன் 9 பந்துகளில் 20* ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். லியம் டாஸன் 23 ரன்கள் எடுத்தார்.ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ரைலி மெரிடித் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா, ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் நிகில் சௌதரி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.In the fourth T20 match against Australia, England batted first and scored 181 runs for the loss of 7 wickets.வைபவ் சூர்யவன்ஷி போன்று திறமைசாலியை ஒருபோதும் பார்த்ததில்லை: முன்னாள் இங்கிலாந்து கேப்டன்