நியூசி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!

Wait 5 sec.

நியூசி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.கிறிஸ்ட்சர்ச் திடலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 89 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் ஆரம்பம் முதலே சொதப்பியது.தேவ்தத் படிக்கல் 21 ரன்களிலும் கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களில் வெளியேற, கே.எல். ராகுல் 25 ரன்களுக்கு தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.இருப்பினும், நிதானமாக விளையாடிய துருவ் ஜுரெல் இந்திய அணிக்காகப் போராடி 170 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் 246 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்திய அணி 110 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.In the first innings of the second Test match against New Zealand, the Indian team lost all 10 wickets for 246 runs.