அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி, வங்கக் கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது.இதன் காரணமாக இன்று (நவ. 29) நீலகிரி, கோவை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.The Chennai Meteorological Centre has stated that rain is likely in 4 districts over the next 2 hours.10 மாவட்டங்களில் இன்று (நவ.29) பலத்த மழைக்கு வாய்ப்பு