கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஜாமின் மனு: அரசு பதிலளிக்க உத்தரவு?

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவான சி. அருள் விக்னேஷ், ஜாமின்கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீஸார் வெள்ளிக்கிழமை (நவ. 27) கைது செய்தனர்.இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அருள் விக்னேஷ், ஜாமின்கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், அவரின் ஜாமின் மனு மீதான விசாரணை, டிச. 1 ஆம் தேதிக்கு வரவுள்ளதாகவும், அரசு வழக்குரைஞர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.சிங்கப்பெண் கடன் திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்! –அமைச்சா் வ.காந்திராஜ்Kallakurichi TVK MLA C. Arul Vignesh files bail plea