தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர தற்போது நமக்கு வேறு வழியில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 29) தெரிவித்தார். ஜனவரிக்கு பிறகு தொகுதி மறுவரையறை வந்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதாலும், தமிழ்நாடு நிச்சயம் பாதிக்கப்படும் என்பதாலும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறினார்.தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அம்முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் பேசியது என்ன என்பது குறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுடன் பேசியதாவது:தொடக்கத்தில் இருந்து நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதை தெளிவாக எடுத்துக்கூறினேன். Constituency Delimitation: Tamil Nadu will be adversely affected! No choice but to support it: M.K. Stalin