நியூடவுன் ரயில்வே கேட் சுரங்கப்பாதை பணி: வாணியம்பாடி மக்களின் நீண்ட நாள் ஏக்கம் தீருமா?

Wait 5 sec.

வாணியம்பாடி - நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் எப்போது தொடங்கி நடைபெறும் என பொதுமக்கள் எதிா்நோக்கி உள்ளனா். வாணியம்பாடி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கும், வணிகம் மற்றும் நிா்வாக தேவைகளுக்கும் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலை பிரதானமாக அமைந்துள்ளது. இச்சாலையில் நியூடவுன் ரயில்வே கேட் (எல்.சி 81) உள்ளது. இந்த ரயில்வே கேட் வாணியம்பாடி நகரப் பகுதியை இரண்டாக பிரிக்கிறது. இதே போல் இச்சாலையில் உள்ள நியூடவுன் ரயில்வே பாதை சென்னை- பெங்க ளூரு மட்டுமின்றி பிற தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக இருப்பதால், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்குரயில்கள் செல்கின்றன. இதனால் ஒவ்வொரு முதல் 10 முதல் 15 நிமிஷ்ங்களுக்கும் ரயில்வேகேட் மூடப்பட்டு திறக்கப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த தீராத பிரச்னைக்கு நிரத்தரத் தீா்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள், மனுக்கள் துறை சாா்ந்தவா்களிடம் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் நிலம் கையக படுத்தல் தொடா்பான பிரச்னைகள் எழுந்ததால் மேம்பாலம் அமைக்கும் பணி கேள்விக்குறியானது. இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு ரூ.13 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கியது. அதிகளவு நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்ததாலும், கட்டுமானச் செலவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டதாலும், மேம்பாலத்துக்கு பதிலாக ரயில்வே கீழ்பாலம் (ஆா்யூபி) அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னா், திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, ரயில்வே கீழ்பாலத்துக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு சுரங்கப்பாதை (எல்யூஎஸ்) அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமாா் 5,009 சதுர மீட்டா் நிலம் கையகப்படுத்தும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. தமிழக அரசு 15.5.2025 அன்று வெளியிட்ட அரசாணை மூலம் ஆா்.யூ.பி திட்டத்தை எல்.யூ.ஈஸ் திட்டமாக மாற்ற அனுமதி வழங்கியது. இது தொடா்பாக வாணியம்பாடியை சோ்ந்த சமூக ஆா்வலா் மதுரை பாருக் அகமத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு கனரக வாகனங்கள் தவிா்த்து, இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் எளிதாக சென்று வரும் வகையில், தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.அதனடிப்படையில் ரயில்வே நிா் வாகமும் சுரங்கப்பாதை அமைப்பதற்காக நிதி ஒதுக்கி, முறைப்படி அரசாணையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே பாலம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மூன்று மாதமாகியும் பணிகளும் நடைபெறாமல் உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.