வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படம்: ப்ரோமோ அப்டேட்!

Wait 5 sec.

வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படத்தின் ப்ரோமோ விடியோ இன்று வெளியானது. இயக்குநர் வெற்றிமாறன் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் அரசன் படத்தை இயக்கி வருகிறார். அதேநேரம், கென் கருணாஸை வைத்து ராஜன் வகையறா படத்தையும் இயக்கி வருவதாகச் செய்திகள் வெளியானது. இரு படங்களும் வடசென்னை படத்தின் கதைக்களத்தில் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. வடசென்னை படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ராஜன் வகையறா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அமீரின் சிறுவயது கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதை உறுதிப்படுத்தின. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோ விடியோ இன்று வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் கென் கருணாஸ் நாயகனாக நடிப்பதாகவும் சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக விடியோ அறிவிப்பு இரு நாள்களில் வெளியாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படத்தின் அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.Romantic Hero & Romantic Composer ⭐️ https://t.co/iTIcF4sy2k— Ken Karunaas (@KenKarunaas) November 29, 2026கென்னின் இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?New film from the Vetrimaaran - Ken Karunas - Sai Abhyankar collaboration: Promo update!