கடைசி நாளில் ஆடுகளம் வெலிங்டன் ஆடுகளம் போல் மாறிவிடும்: துருவ் ஜுரெல்

Wait 5 sec.

கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் கடைசி நாளில் வெலிங்டன் ஆடுகளம் போல் மாறிவிடும் என இந்திய வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் நியூசிலாந்து அணி 243 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.இந்த நிலையில், ஆடுகளம் கடைசி நாளில் பேட்டிங்குக்கு சாதகமாக மாறிவிடும் எனவும், கடைசி நாளில் ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் உலர்ந்து பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது. ஆடுகளம் வெலிங்டன் போன்று மாறிவிடும் என நினைக்கிறேன். ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது, பேட்டிங் செய்வது மிகவும் எளிதாகிவிடும் என நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் இறுதிக்கட்ட பேட்டர்கள் விளையாட வரும்போது, அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையளிக்க நான் முயற்சிக்கிறேன். பந்துவீச்சாளர்கள் தடுப்பாட்டத்தை விரும்பமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்கு உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.முதல் இன்னிங்ஸில் துருவ் ஜுரெல் 88 ரன்கள் எடுத்தார். அணியின் இறுதிக்கட்ட பேட்டர்களான ஆகாஷ் தீப், குர்னூர் பிராருடன் இணைந்து துருவ் ஜுரெல் சிறப்பாக ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கடைசி மூன்று விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.Indian player Dhruv Jurel has stated that the Christchurch pitch will transform into something resembling the Wellington pitch by the final day.தனியொருவராக போராடிய மிட்செல் மார்ஷின் சதம் வீண்; டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!