தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெற்றி பெறும் என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று (நவ. 29) தெரிவித்தார்.2029 தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் அக்கட்சியில் ஒருவரையும் விட்டுவைக்கப்போவதில்லை; ஊழல் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:'' நம் கூட்டம் நடக்கும் நேரத்தில் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெல்லும். 2029-ல் திமுகவால் வெற்றி பெற முடியாது. எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி, உங்களால் வெற்றி பெற முடியாது. முதல்வர் விஜய்யின் கோட்டை தமிழ்நாடு.நிதி ஆதாரங்களை நாம் படிப்படியாக அதிகரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் 6 மாதங்களில் சொந்த வரி வருவாய் 12.8% அதிகரித்துள்ளது. ரூ. 1.7 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் ரூ. 1.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வெளிப்படையான அரசாங்கம் நடப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.கடந்த ஆட்சியில் எந்தத் துறையில் ஊழல் நடந்தாலும் கொண்டுவாருங்கள். நடவடிக்கை எடுப்போம். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்படும். 2029-ல் தில்லிக்கே உங்களால் செல்ல முடியாது. அந்த நிலை ஏற்படும்'' என மரிய வில்சன் பேசினார். பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாTVK will win regardless of how many constituencies are added Marie Wilson on constituency delimitation