பாஜக நாடாளுமன்றக் குழுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை ( நவ. 30) தொடங்கவுள்ளது. இதில், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.இந்தச் சட்ட முன்வரைவில், 2026-ஆம் ஆண்டிற்கான அரசியலமைப்பு (132-வது திருத்த) மசோதா, 2026-ஆம் ஆண்டிற்கான தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் சட்டங்களுக்கான திருத்தம் ஆகியவை அடங்கும்.இதன்படி, மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.இந்தச் சந்திப்புத் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பாஜக நாடாளுமன்ற செயற்குழுவுடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டார்.இதனிடையே, பாஜக சார்பில் மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் 'Three-line whip' எனப்படும் மூன்று வரி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முக்கிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக நவ. 30 முதல் டிச. 3 வரை முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் கட்டாயம் இடம்பெறவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் பாஜக அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் வெளியிட்ட காணொலி ஒன்றில், “பெண் சக்தியின் பங்களிப்பை உறுதி செய்யும் போராட்டம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு பல ஆண்டுகளாக போராடுவோரில் நானும் ஒருவன். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாடு என்றும் மாறாமல் உள்ளது.எங்களைப் பொறுத்தவரை, நாட்டு நலனே மிக உயர்ந்தது. ஆனால், சிலருக்குக் நாட்டு நலன்களை விட கட்சி நலன்களே மேலானதாக மாறும்போது, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பாதிக்கப்படுகின்றது.பெண்களுக்கான இடஒதுக்கீடு தற்போதைய காலத்தின் கட்டாயம். இதில் எங்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாதது. மக்கள் தொகையில் பாதியாக உள்ள மகளிரின் கனவுகளுக்காகவும் நமது தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் இந்த மசோதாவை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்Prime Minister Modi meets with the BJP parliamentary group!