பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா

Wait 5 sec.

பாஜகவிடம் திமுக சரணடைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (நவ. 29) விமர்சித்தார். சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:திமுகவின் சட்டப்பேரவை தீர்மானம் வேறு இன்றைய நிலைப்பாடு வேறு. பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளித்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. முதல்வர் ஒரு தீர்க்கதரிசி, என்ன நடக்கும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே கூறினார். திமுக - பாஜக ரகசிய கூட்டணி என்று 6 மாதங்களுக்கு முன்பே கூறியவர் நம் முதல்வர் விஜய். பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக. இது இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது என ஆதவ் அர்ஜுனா பேசினார். இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்DMK has surrendered to the BJP: Aadhav Arjuna