ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள விவசாய நிலத்திலிருந்து ட்ரோன் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை ஹிரநகர் பிரிவில் உள்ள ஜங்கிசாக் கிராமத்தில் இருந்த வயல்வெளியில் இந்த ட்ரோன் காணப்பட்டது.உடனே பாதுகாப்பு அமைப்புகள் அதனைக் கைப்பற்றின. தொடர்ந்து அந்த ட்ரோன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரோன் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்களோ, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளோ கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். ட்ரோன் அந்தப் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களும், அவர்களது கூட்டாளிகளும் சர்வதேச எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீருக்குள் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கடத்துவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகப் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கெனவே எச்சரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.A drone was recovered from an agricultural field near the International Border in Jammu and Kashmir's Kathua district, officials said on Saturday.மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!