தவெகவினர் இனி பேனர்களை வைக்க வேண்டாம் என்றும், பேனர் வைக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.வேலூர் மாவட்டம், அரியூரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர் வினோத் கண்ணா தலைமையில் நடைபெற்ற இப்போட்டியினை நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார். இவ்விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுதாகர், சிந்து, தாஹீரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து 3,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கலந்துகொண்டு பேசியதாவது: "மாணவர்கள், பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். கைபேசி இல்லாமலேயே இவ்வளவு வேகமாக 130 கணக்குகளைப் போடுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆனால் மட்டும் போதாது. அரசியலுக்கும் வர வேண்டும். இப்போது லஞ்சமில்லாத அரசியல் இருக்கிறது. அரசியலில் கணக்குகள் போடலாம், ஆனால் மேலே உள்ள ஆண்டவன் ஒரு கணக்கு போடுகிறார்" எனப் பேசினார்.மேலும், "மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். தற்போது என்னை வரவேற்று அதிக அளவில் பேனர்களை வைத்திருந்தார்கள். முதல்வர் பேனர் கலாசாரம் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். எனவே, பேனருக்கு ஆகும் செலவைக் கொண்டு ஏழைகளுக்கு உதவுங்கள்" எனப் பேசினார். Water Resources Minister N. Anand has urged TVK cadres not to put up banners anymore and to help the poor with the money spent on putting up banners.உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து அமைதி காக்க வேண்டும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்