மயிலாடுதுறையில் காதல் ஜோடி உடல்கள் கண்டெடுப்பு! ஆணவப் படுகொலையா?

Wait 5 sec.

மயிலாடுதுறையில் காதல் ஜோடி இருவரின் உடல்கள் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபன் (20), ஆதிக்க சாதிப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று (ஜூன் 30) காலை அப்பகுதியில் உள்ள ஒரு தோப்பில் உள்ள கூரைக் கொட்டகையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது தற்கொலையா? கொலையா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சாதிரீதியாக தன்னைத் தாக்கியதாக பார்த்திபன், பெண்ணின் வீட்டார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது ஆணவப் படுகொலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.Bodies of a young lovers found in Mayiladuthurai; likely to be An honor killingஎஸ்ஐஆர்: காங்கிரஸ், திமுக ஆகிய 21 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!