தொந்தரவு கொடுத்த இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!

Wait 5 sec.

நடிகை கயாடு லோஹர் தனக்குத் தொந்தரவு அளித்த இளைஞரின் தலையை உடைத்ததாகக் கூறியுள்ளார். தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக கயாடு லோஹர் வளர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படத்தால் தொடர்ந்து இதயம் முரளி, டொவினோ தமாஸுடன் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், பள்ளிச்சட்டம்பி பெரிய வெற்றியை பெறவில்லை. இதயம் முரளி விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கயாடு லோஹர், “நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஒருவன் என்னைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தான். ஒருகட்டத்தில் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து அவன் மீது எறிந்தேன். மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. நான் திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன். யார் தவறு செய்தாலும் அமைதியாக இருக்கக் கூடாது. திருப்பி எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்: ப்ரீத்தி முகுந்தன்Actress Kayadu Lohar has stated that she smashed the head of a young man who was harassing her.