ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா முரளிதரன். தற்போது, இவர் செல்லமே செல்லமே தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிகர் ரேஷ்மா முரளிதரன் உடன் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கிறார்.சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், பிரிந்த கனவன் மற்றும் மனைவிக்கு இடையே சிக்கி தவிக்கும் குழந்தைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.செல்லமே செல்லமே தொடர் மேலும், இந்தத் தொடரில் அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்த நிலையில், செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.செல்லமே செல்லமே தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.Filming for Reshma Muralidharan's serial Chellame Chellame has concluded.ஹார்ட் பீட் தொடரில் இருந்து தீபா பாலு விலகல்?