ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

Wait 5 sec.

ஆதார் அடையாள அட்டை விவரங்களில், ஒருவர் தன்னுடைய மின்னஞ்சலையும் இணைக்க ஜூலை 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுவரை, ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சலை சேர்ப்பதற்கு ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அந்த கட்டணம் நிறுத்தப்படுகிறது. மக்கள் இனி இலவசமாகவே தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்ளலாம்.ஒருவரது ஆதார் அடையாள அட்டையில் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரியை மிக எளிதாக ஆதார் செயலி மூலம் ஒருவர் அப்டேட் செய்து கொள்ள முடியும். என்ன பயன்?ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சலை இணைப்பதன் மூலம், ஒருவரது ஆதார் எண் எங்காவது சரிபார்க்கப்பட்டால், அது தொடர்பான தகவல் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கவோ, சிம் கார்டு பெறவோ, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்திருந்தால் அது குறித்து மின்னஞ்சல் வரும். இதன் மூலம் யாரும் மோசடி செய்வதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.ஒருவேளை, ஆதார் அட்டையை இழந்துவிட்டால், அதனை திரும்பப் பெற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் இணைப்புகள் மூலம் புதிய ஆதார் அட்டைப் பெறலாம்.புதிய அறிவிப்புகள், சேவைகள், என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மின்னஞ்சல் மூலம் அறிந்து கொள்ளலாம்.செல்போனில் ஆதார் ஆப் இருந்தால் போதும், இதுபோன்ற அனைத்து விவரங்களையும் எளிதில் நிறைவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Linking Aadhaar with email is now free! What are the benefits?