ராஜஸ்தானின் ஃபலோடி மாவட்டத்தில் உள்ள டெச்சு பகுதியில் தம்பதி, குழந்தைகள் இருவர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சத்னம் சிங் கூறுகையில், தம்பதியினர் மற்றும் குழந்தைகள் இருவர் விஷம் அருந்தினார்களா அல்லது கழுத்து நெரித்துக் கொள்ளப்பட்டார்களா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கட்டிலில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு தடயவியல் ஆய்வு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களது சொந்த மாவட்டமான பாலியிலிருந்து வந்தடைந்த பிறகு உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு மாற்றப்படும் என்றும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.A couple and their two children were found dead in their house in Dechu area of Rajasthan's Phalodi district on Tuesday, police said.அயோத்தி நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!