ஐபோன் கேமராவில் செய்யறிவு (ஏஐ) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் குரல் வழியில் கேமராவை கட்டுப்படுத்தி புகைப்படம், விடியோ எடுக்கலாம். எடிட்டிங் செய்யலாம்.மேலும், புகைப்படம் எடுக்கும் இடங்கள், அது குறித்த தகவல்கள் குறித்து ஏஐ உதவியுடன் உடனடியாகத் தகவல்களை பயனர்களால் பெற முடியும் என ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.அதாவது, ஐ.ஓ.எஸ். 27 அப்டேட்டில் கேமரா செயலியில் குரல் வழி கட்டுப்பாடான 'சிரி' வசதி அறிமுகமாகும் என ஆப்பிள் தரப்பில் கூறப்படுகிறது.பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை முழுக்க முழுக்க ஏஐ மூலம் எளிமையாக்கும் அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் கேமராவில் செய்யறிவு (ஏஐ) உதவியுடன் குரல் வழியில் கட்டுப்படுத்தும் அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.இதனால், ஐபோன் சிரி வசதியில் பயனர்கள் கட்டளையிடுவதைப்போல கேமராவையும் குரல் மூலம் கட்டுப்படுத்தி புகைப்படங்கள், விடியோக்கள் எடுக்கலாம். மேலும் எடுத்த புகைப்படத்தில் உள்ள இடம், உணவு, பொருள்கள் குறித்த தகவல்களை தொகுப்பாக உடனடியாகப் பெறலாம்.உதாரணமாக ஒரு உணவை புகைப்படம் எடுத்தால் அந்த உணவு குறித்து முழுத் தகவல்களையும் பெற முடியும். தவல்களை முழுமையாகத் தேடுவதற்காக சாட் ஜிபிடி போன்ற செய்யறிவு தளத்தையும் ஆப்பிள் பயன்படுத்தவுள்ளது.இதனை மென்பொருள் மேம்பாடாக (அப்டேட்) மட்டுமின்றி எதிர்கால செல்போன் செயலிகளின் பயன்பாடாகவும் பார்க்கப்படுகிறது. யூடியூபில் விடியோவை இனி ஈஸியாக தேடலாம்! Apple’s iPhone Camera App Is Getting an AI Upgrade in iOS 27