முதல்வர் விஜய் வருகிற ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் சென்றபோது வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய்யும் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.பின்னர், பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க முடியாமல் போகவே, அதன்பின்னர் கடந்த 2025 அக்டோபர் 27 ஆம் தேதி, அதாவது சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த குடும்பங்களை சென்னைக்கு அழைத்து மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினார் விஜய். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. கரூருக்கு வந்து உங்கள் அனைவரையும் நேரடியாகச் சந்திப்பேன் என்றும் விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது முதல்வரான பிறகு இந்த பயணம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜூலை 10 ஆம் தேதி இரு நாள் பயணமாக கரூர் செல்லும் முதல்வர் விஜய், அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். தொடர்ந்து கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினரையும் நேரடியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை 10, 11 ஆகிய இரு நாள்கள் கரூர் பயணம் மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசுத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Karur stampede: Chief Minister Vijay to meet the affectedவாட்ஸ்ஆப்பில் புதிய வசதி! மொபைல் எண் தெரியாமலேயே 'மெசேஜ்' செய்யலாம்!