நாட்டு மக்களின் நம்பிக்கையான வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)-இல் 1,500 'புரோபேஷனரி ஆபீசர்' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையவழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படலாம். உங்கள் கனவுப் பணி வாழ்க்கை எஸ்பிஐ தொடங்குவதன் மூலம் மூலம் நீங்கள் வெறும் ஒரு வங்கியில் பணியாளராக மட்டும் அல்லாமல், மாறாக நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் மற்றும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்டு மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு நிறுவனத்தின் அங்கமாகிறீர்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை கவனமாகப் படித்துப் புரிந்துகொண்ட பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CRPD/PO/2026-27/09பணி: Probationary Officerமொத்த காலியிடங்கள்: 1500சம்பளம்: மாதம் ரூ.48,480தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.வயது வரம்பு: 1.4.2026 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருந் வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங் கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 1/ 4 மதிப்பெண் குறைக்கப்படும்.முதல்நிலைத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி / நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.முதன்மைத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளிஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.முக்கிய தேதிகள் விபரம்: முதல்நிலைத் தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்ட் 2026முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2026தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: டிசம்பர் 2026விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது..விண்ணப்பிக்கும் முறை: www.sbi.bank.in/web/careers/current opening என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப் பிக்கும்போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.State Bank of India invites online application from eligible Indian citizens for appointment as Probationary Officers....விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.79,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் ஹவில்தார் பணி!