கட்டா குஸ்தி - 2 படத்தின் ஹவுஸ் ஹஸ்பண்ட் பாடல் வெளியீடு!

Wait 5 sec.

விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி - 2 படத்தின் மூன்றாவது பாடலான ’ஹவுஸ் ஹஸ்பண்ட்’ இன்று வெளியானது.நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.செல்ல அய்யாவு இயக்கியுள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஐஷ்வர்யா லட்சுமி நாயகியாகவும், முனீஸ்காந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகமும் நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது பாடலான ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் எழுதிய இப்பாடலை சத்யன் மஹாலிங்கம் பாடியுள்ளார். 'House Husband' song from the movie Gatta Kusthi 2 released.விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!