கால்பந்து உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை கடந்த 20 ஆண்டுகளாக 90 நிமிஷங்கள் அடங்கிய ரெகுலர் டைமிங்கில் எந்த அணியும் தோற்கடித்ததில்லை என்ற வரலாறு இப்போதும் தொடர்கிறது. கடைசியாக 2006ல் போர்ச்சுகல் அணி நெதர்லாந்தை 90 நிமிஷ ரெகுலர் டைமிங்கில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மொராக்கோ உடனான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நெதர்லாந்து 1-1 என கூடுதல் நேரம் வரை இருந்தது. பின்னர், பெனால்டியில் 2-3 எனத் தோல்வியுற்றது. கடந்த 2022 உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவை காலிறுதியில் 2-2 என சமன்படுத்தி கலங்கடித்தது. அங்கும் பெனால்டியில் தோல்வியுற்றது. நெதர்லாந்து அணி 2018 உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. அதற்கு முன்னதாக, 2014 உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுடன் டிரா செய்து, பெனால்டியில் 2 - 4 என தோல்வியுற்றது. இதற்கும் முன்னதாக 2010 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரெகுலர் டைமிங்கில் ஸ்பெயினிடம் டிரா செய்த நெதர்லாந்து கூடுதல் நேரத்தில் (116ஆவது நிமிஷத்தில்) ஒரு கோலை இழந்து தோல்வியுற்றது. இந்த உலகக் கோப்பையிலும் குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் ஜப்பானுடன் 2-2 என சமன்படுத்தியது. மொராக்கோவுடன் டிரா செய்து பெனால்டியில் தோல்வியுற்றது. இருந்தும் 20 ஆண்டுகளாக 90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணியாக தனது சாதனையை நீட்டித்து வருகிறது. 2 நாள்களுக்கு முன்பு குழந்தை இழப்பு... கோல் அடித்து சமர்ப்பித்த நெதர்லாந்து வீரருக்கு ரசிகர்கள் மரியாதை!No one has defeated the Netherlands in under 90 minutes in two decades. Morocco won Yet the record remains