மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா். சிறுவனின் தாய் உள்பட 7 போ் காயமடைந்தனா்.ஆயுதமேந்திய பயங்கரவாதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.அதேநேரம், காஸாவில் கடந்த அக்டோபரில் போா்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், இஸ்ரேல் ராணுவம் நாள்தோறும் தொடா்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 360-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 1,045 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.