ஜெயிலர் - 2 திரைப்படத்தின் புதிய அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் அதிகாரி தன் மகனைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளுடன் கூடிய எமோஷனலான கதையாக முதல் பாகம் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜெயிலர் - 2 திரைப்படமும் முத்துவேல் பாண்டியன் சந்திக்கும் அடுத்த பிரச்னைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது, ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ சான்றிதழ்! ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?The production company has released a new announcement regarding the movie Jailer 2.