இன்றைய செய்திகள் ஜூலை 2 - நேரலை

Wait 5 sec.

குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்வடக்கில் பாஜக பயன்படுத்தும் வாஷிங்மிஷன் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று தவெகவை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி!மு.க. ஸ்டாலின் விலகினால்தான்...மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு 1,200 உயா்ந்துள்ளது. அதன்படி பவுன் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது.ஜூலை 2-ல் தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?செந்தில் பாலாஜியை தேடும் தனிப்படை?திமுகவுக்கு மாறும்படி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்! செந்தில் பாலாஜியை தேடும் தனிப்படை போலீஸ்?‘யூஸர்நேம்’ பயன்பாட்டுக்கு தடைவாட்ஸ்ஆப்பில் அறிமுகமாக இருக்கும் யூஸர்நேம் பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வாட்ஸ்ஆப்பில் ‘யூஸர்நேம்’ பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடைஅதிமுகவிலிருந்து ராஜசேகரன் விலகல்தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து ராஜசேகரன் விலகல்! விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கில் போட்டியிட்டவர்!!தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம்தாஜிகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு6 பேர் கைதுதமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.சீமான் குற்றச்சாட்டுஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவாா்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவாா்க்க தமிழக அரசு முயற்சி: சீமான் குற்றச்சாட்டுஇந்தியா - இங்கிலாந்து போட்டி ரத்துஇங்கிலாந்து - இந்தியா அணிகள் நேற்றிரவு மோதிய முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.முதல் வெற்றிக்கு காத்திருக்கும் ஷ்ரேயாஸ்! இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து!