பெங்களூர் தெற்கில் உள்ள கல் குவாரியில் ராட்சத கிரானைட் பாறை சரிந்து விழுந்ததில், பிகாரைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.காவல்துறையின் தகவலின்படி, பெங்களூரு தெற்கு தாலுகா எல்லையில் அமைந்துள்ள மடப்பட்டனா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கல்குவாரியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புதிய கிரஷர் இயந்திரம் அமைப்பதற்காக, தொழிலாளர்கள் குவாரிப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமான ராட்சத பாறை உருண்டு, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்து நடைபெற்ற நேரத்தில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.மேலும், இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். Eight workers mostly from Bihar were killed after a massive granite rock collapsed at a stone quarry in Bengaluru South Taluk on Thursday, police said.தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷியின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!