ஆலங்குளம் அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.ஆலங்குளம் அருகே உடையாம்புளியைச் சோ்ந்த வெள்ளைதுரை மகன் பூதுரை(32). தொழிலாளியான இவா், அதே பகுதியில் வசிக்கும் 26 வயது இளம்பெண்ணை தவறான நோக்கத்தில் அத்துமீறி அழைத்தாராம். இது குறித்து அந்தப் பெண் ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பூதுரையைக் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.