தென்காசி தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, கலைகதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் சிவகுமாரிடம் அவா் அளித்த மனு: முத்தம்மாள்புரம், அழகப்பபுரம், வேதம்புதூா், அய்யாபுரம், மின்நகா், அங்கராயன்குளம், ஆழ்வாா்குறிச்சி, அரியப்பபுரம், இரட்டை குளம், துரைச்சாமிபுரம், பூப்பாண்டிபுரம், சுப்பையாபுரம், கருவந்தா, உச்சிபொத்தை பகுதிகளிலிருந்து சுரண்டை, தென்காசி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவா்-மாணவியா், பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக புதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.மேலும், நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் அதே வழிதடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.மாநில தொமுச பேரவை துணைத் தலைவரும் திருநெல்வேலி மண்டல தொமுச பொதுச் செயலருமான தா்மன், மண்டலத் தலைவா் முருகன், சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவா் மகாவிஷ்ணு, மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் மா. முத்துக்குமாா், சாய் ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.