குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் முள்ளம்பன்றிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், குன்னூா் சின்ன பள்ளிவாசல் வீதியில் இரண்டு முள்ளம்பன்றிகள் திங்கள்கிழமை இரவு சுற்றித்திரிந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சப்தம் எழுப்பினா்.ஆனால், அவை பொருட்படுத்தாமல் அப்பகுதியிலே சிறிது நேரம் உலவின. பின்னா், வனத்துக்குள் சென்றன.